Advertisement

அரசியல் » மோடி அமைச்சரவை ஒரு பார்வை மே 31,2019 15:16 IST

அரசியல் » மோடி அமைச்சரவை ஒரு பார்வை மே 31,2019 15:16 IST

தொடர்ச்சியாக 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள நரேந்திர தாமோதர் தாஸ் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அவரையும் சேர்த்து 58 பேர் அமைச்சர்கள். 25 பேர் கேபினட் அமைச்சர்கள். 9 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள். 24 பேர் இணை அமைச்சர்கள். மோடி அமைச்சரவையின் சராசரி வயது 60. பெண்களின் எண்ணிக்கை 6. கூட்டணி கட்சிகளுக்கு 4 அமைச்சர் பதவிகள். தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் எண்ணிக்கை 2. ஒருவர் நிர்மலா சீதாராமன். மதுரையில் பிறந்தவர். கடந்த முறை ராணுவ அமைச்சராக இருந்த நிர்மலாவுக்கு இப்போது நிதி அமைச்சர் பொறுப்பு தரப்பட்டுள்ளது. 2வது நபர் ஜெய்சங்கர். டில்லியில் பிறந்த தமிழர். முன்னாள் IFS அதிகாரி. 2015 முதல் 2018 வரை வெளியுறவுத்துறை செயலாளராக சிறப்பாக செயல்பட்டதால் வெளியுறவுத்துறை அளிக்கப்பட்டுள்ளது. பா.ஜ. தலைவர் அமித் ஷா, BCCI முன்னாள் தலைவர் அனுராக் தாகுர், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் அர்ஜுன் முண்டா, எளிமையின் சிகரம் பிரதாப் சந்திர சாரங்கி உள்ளிட்ட 21 புதுமுகங்களுக்கும் மோடி அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர். மோடியின் முதல் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 37 அமைச்சர்களுக்கு புதிய அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை. இதில் குறிப்பிடத்தகுந்தவர்கள். அருண் ஜேட்லி, சுஸ்மா ஸ்வராஜ். இருவரும் மிகச்சிறந்த முறையில் பணியாற்றியபோதும் உடல்நலக் குறைவை காரணம் காட்டி அவர்களே ஒதுங்கிக் கொண்டனர். 3வது முக்கிய நபர் மேனகா. பிரசாரத்தின்போது முஸ்லிம் வாக்காளர்களை மிரட்டும் பாணியில் பேசியதால் கழற்றி விடப்பட்டார். ராதாமோகன் சிங் உள்ளிட்ட சிலரது செயல்பாடுகள் சரியில்லாததால் பதவி தரப்படவில்லை. தேர்தலில் தோற்ற பொன்ராதாகிருஷ்ணன் போன்ற சிலருக்கும் மீண்டும் பதவி கிடைக்கவில்லை. உ.பி.யில் கூடுதல் சீட் கேட்டு பா.ஜ. தலைமையுடன் மோதிய அனுப்பிரியா பட்டேலுக்கு பாடம் புகட்டப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா தலைவராகலாம் என கருதப்படும் ஜே.பி.நட்டா, மோடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹா ஆகியோருக்கும் பதவி மறுக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:19 ராஜ்ய சபாவில் குடியுரிமை மசோதா நிறைவேறியது

ராஜ்ய சபாவில் குடியுரிமை மசோதா நிறைவேறியது

play button 03:02 என்கவுன்டரை ஏன் எதிர்க்கிறார் ஜ்வாலா?

என்கவுன்டரை ஏன் எதிர்க்கிறார் ஜ்வாலா?

play button 01:15 குஜராத் கலவரம்; மோடிக்கு நற்சான்றிதழ்

குஜராத் கலவரம்; மோடிக்கு நற்சான்றிதழ்

play button 04:03 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 11-12-2019 | Short News Round Up | Dinamala

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 11-12-2019 | Short News Round Up | Dinamala

play button 01:33 விளையாட்டுச் செய்திகள் | Sports News 11-12-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 11-12-2019 | Sports Roundup | Dinamalar

play button 08:28 தேவதைகளை  தொட்டால் சுடவேண்டும்

தேவதைகளை தொட்டால் சுடவேண்டும்

play button 00:24 ஐதராபாத் என்கவுன்டர்  சுப்ரீம் கோர்ட் விசாரணை

ஐதராபாத் என்கவுன்டர் சுப்ரீம் கோர்ட் விசாரணை

play button 01:18 முஸ்லிம்கள் பயமின்றி வாழலாம்; அமித்ஷா உறுதி

முஸ்லிம்கள் பயமின்றி வாழலாம்; அமித்ஷா உறுதி

play button 00:42 தடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்

தடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்

play button 01:44 'தூய்மை  இந்தியா'வுக்கு  உதவும்  இட்லிகடை

'தூய்மை இந்தியா'வுக்கு உதவும் இட்லிகடை

play button 01:46 திமுகவின் நாடகத்துக்கு முடிவு

திமுகவின் நாடகத்துக்கு முடிவு

play button 01:39 மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களின் லட்சதீபம்

மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களின் லட்சதீபம்

play button 01:14 PSLV-C48 ராக்கெட் லாஞ்ச் சக்சஸ்!

PSLV-C48 ராக்கெட் லாஞ்ச் சக்சஸ்!

play button 00:52 காஷ்மீரிலிருந்து அசாமுக்கு விரையும் ராணுவ வீரர்கள்

காஷ்மீரிலிருந்து அசாமுக்கு விரையும் ராணுவ வீரர்கள்

play button 07:44 E - வேஸ்ட் பயங்கரம்!

E - வேஸ்ட் பயங்கரம்!

play button 01:15 தொட்டி பாலத்தை தொட்ட வைகை தண்ணீர்

தொட்டி பாலத்தை தொட்ட வைகை தண்ணீர்

play button 03:13 திருநங்கைகள் தேசிய குறும்பட விழா

திருநங்கைகள் தேசிய குறும்பட விழா

play button 01:08 எப்போதான் அரசியலுக்கு வருவார் ரஜினி?

எப்போதான் அரசியலுக்கு வருவார் ரஜினி?

play button 01:42 புதுஜெயிலில் கேக், செடி, தொட்டிகள் ஆர்டர் செய்யலாம்

புதுஜெயிலில் கேக், செடி, தொட்டிகள் ஆர்டர் செய்யலாம்

play button 04:15 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 11-12-2019 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 11-12-2019 | மாலை 4 மணி | Dinamalar

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X