சம்பவம் » மணல் கொள்ளையை தடுத்தவர் கொலை | Sand Smuggling | Murder | Ramanathapuram | Dinamalar ஜூன் 03,2019 00:00 IST
ராமநாதபுரம் அருகே இளமனூர் கிராமத்தில் உள்ள புரண்டி கண்மாயில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியவர்களை, அக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் தடுத்து நிறுத்தினர். ஆத்திரமடைந்த மணல் கொள்ளையர்கள், கண்மாயில் இருந்து வெளியேறினர். சிறிது நேரத்தில் இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் கும்பலாக வந்த கொள்ளையர்கள், கிராமத்தினரை கண்மூடித்தனமாக ஆயுதங்களால் தாக்கினர். இதில் லட்சுமணன், செல்வம், முருகேசன், சாத்தையா ஆகியோர் படுகாயமடைந்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மோகனை தண்ணீரில் மூழ்கடித்தனர். இதில் மோகன் பரிதாபமாக இறந்தார். கொலை செய்த, மணல் கொள்ளை கும்பலை கைது செய்யக்கோரி கிராமத்தினர், கலெக்டர் வீரராகவ ராவின் முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அதிமுகவினர் என்பதால், நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, மோகன் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
வாசகர் கருத்து