சம்பவம் » கோழியை பிடிக்க முயன்ற ராணுவ வீரர் பலி ஜூன் 04,2019 00:00 IST
திருச்சி மாவட்டம், நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த ராணுவவீரர் ஜான்பீட்டர். 35 வயதான இவர் , பஞ்சாப் மாநிலம் பதான்கோட் பகுதியில் பணியாற்றினார். ஒரு மாத விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார் ஜான்பீட்டர். வீட்டில் வளர்க்கும் கோழியை பிடிக்க முயன்ற போது பறந்து சென்ற கோழி, வீட்டில் இருந்த தண்ணீர் இல்லாத 70 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்தது. கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கிய ஜான்பீட்டர், கோழியை மீட்டு மேலே ஏற முயன்ற போது தவறி கிணற்றுக்குள் விழுந்தார். படுகாயமடைந்த ஜான்பீட்டரை மீட்ட அப்பகுதி இளைஞர்கள், மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்த போது, ஜான்பீட்டர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விடுமுறையில் வந்த ராணுவவீரர் இறந்தது, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
வாசகர் கருத்து