பொது » 24 மணி நேரமும் கடைகள் திறக்க அனுமதி ஜூன் 06,2019 20:11 IST
தமிழகத்தில் கடைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களை திறந்து வைப்பதற்கான நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய அரசின்,கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட மசோதா இறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை திறக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டடுள்ளது. தொழில் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என அரசு தெரிவித்துள்ளது. பெண் பணியாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அரசாணை வெளியாகியுள்ளது. இந்த அரசாணை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும்.
வாசகர் கருத்து