பொது » அதிமுகவில் அனைவரும் தலைவர்கள்தான்! ஜூன் 08,2019 15:28 IST
அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என்று மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா பேட்டி அளித்தது குறித்த பேசிய முதல்வர் பழனிசாமி, அவர் என்ன சொன்னார் என்பது பற்றி முழுமையான விபரங்கள் தெரிந்த பின்பே கருத்து கூற முடியும். இருந்தாலும், அதிமுக பலம் வாய்ந்த கட்சியாகத்தான் இருக்கிறது. இது தொண்டர்களால் ஆளப்படும் கட்சி. இங்கு எல்லோரும் தலைவர்கள் தான் என்றார். சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தில் 40 சதவீதம் கமிஷன் பெற்றதாக திமுக எம்.பி., பார்த்திபன் கூறுவது பச்சைப் பொய் என்றார் முதல்வர். முன்னதாக, சேலம் - எடப்பாடியில், கவுண்டம்பட்டி - நயினாம்பட்டி சாலையில், 1.90 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம், சார் கருவூலம் மற்றும் ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளை முதல்வர் திறந்து வைத்து பேசினார்.
வாசகர் கருத்து