விளையாட்டு » Virat Kohli Fastest 11,000 Runs | ரோஹித், கோஹ்லி அதிரடி; பாக். அலறல் | WorldCup 2019 ஜூன் 16,2019 20:02 IST
ரோஹித் சர்மாவும், ராகுலும் துவக்க வீரர்களாக களமிறங்கி பொறுப்புடன் ஆடி, முதல் விக்கெட்டுக்கு 136 ரன் சேர்த்தனர். அதிரடியாக ஆடிய ரோகித் 113 பந்துகளில் 140 ரன் எடுத்து அவுட்டானார். இது, 24வது ஒருநாள் சதம். நடப்பு உலகக்கோப்பையில் ரோகித் அடிக்கும் 2வது சதம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 122 ரன் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். கேப்டன் கோஹ்லி, 57 ரன் எடுத்தபோது ஒரு உலக சாதனையை படைத்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் மிக விரைவில் 11,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமைதான் அது.
வாசகர் கருத்து