பொது » 11 சாயப்பட்டறைகள் இடித்து அகற்றம் ஜூன் 21,2019 14:05 IST
ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி சாயப்பட்டறைகள் செயல்படுவதாக புகார் எழுந்தது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிகள் அதிகாரிகள் ஆய்வுசெய்தபோது, ராசிபுரத்தில் 7 சாய, சலவைபட்டறைகளும், கூனவேலம்பட்டியில் 4 சாயப்பட்டறைகளும் என 11சாயப்பட்டறைகள் அனுமதியின்றி செயல்பட்டு வந்ததும், சுத்திகரிக்கப்படாத ரசாயன சாயத்தண்ணீரை வெளியேற்றி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த சாயப்பட்டறைகள், இடித்து தரைமாக்கப்பட்டன.
வாசகர் கருத்து