விளையாட்டு » மாநில தடகள போட்டி ஜூன் 24,2019 00:00 IST
மாநில அளவிலான சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் திருச்சியில் நடைபெற்றது. சென்னை, திருச்சி, கோவை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1450 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. மகளிர் பிரிவில் 99 புள்ளிகளைப் பெற்ற செயின்ட் ஜோசப் ஸ்போர்ட்ஸ் அகாடமி முதலிடம் பெற்றது. 70 புள்ளிகள் பெற்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம அணி இரண்டாவது இடம் பெற்றது. ஆடவர் பிரிவில் 107 புள்ளிகள் பெற்ற செயின்ட் ஜோசப் விளையாட்டு அகாடமி முதலிடம், 67 புள்ளிகள் பெற்ற தமிழ்நாடு காவல்துறை அணி இரண்டாவது இடம் பிடித்தன. செயின்ட் ஜோசப் விளையாட்டு அகாடமி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
வாசகர் கருத்து