Advertisement

சிறப்பு தொகுப்புகள் » கோவையில் தண்ணீர் பஞ்சமே இல்லை ஏன் தெரியுமா? ஜூலை 01,2019 13:09 IST

சிறப்பு தொகுப்புகள் » கோவையில் தண்ணீர் பஞ்சமே இல்லை ஏன் தெரியுமா? ஜூலை 01,2019 13:09 IST

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில், மாவட்டத்தில் உள்ள பல குளங்கள், நீர்நிலைகள் தூர் வாரி, தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், வெள்ளலூர் குளத்தை கேமரூன் நிறுவனத்துடன் இணைந்து தூர்வாரி, நீர் வழித்தடங்களை சுத்தப்படுத்தியதும் ஒன்று. இதனால், பல ஆண்டுகளுக்கு பின், இக்குளம் நிரம்பியது. இக்குளக்கரையில் அடர்வனம் உருவாக்க திட்டமிட்டு, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 125வது வார களப்பணியாக 1,500 மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் நடப்பட்டுள்ளன. இதில் சிறுவர், சிறுமிகள் உட்பட ஆண்கள், பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பல்வேறு மரக்கன்றுகளை நட்டனர். ஏற்கனவே, இக்குளக்கரையில், 2,100 மரக்கன்றுகள், மூலிகை செடிகள் நடப்பட்டன. அவை, வளர்ந்து சோலையாகி, பல்லுயிர்களுக்கும் அடைக்கலம் கெடுத்து வருகிறது. வாரத்தில் 6 நாட்கள் வீட்டுக்கு, ஞாயிறு ஒருநாள் நாட்டுக்கு என்ற முறையில் வாரம்தோறும், குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் நீர்நிலைகளை பராமரிப்பது மற்றும் மரங்கள் வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த அமைப்பினர் மட்டுமல்ல, சிறுதுளி, ராக், கவுசிகா நதி மீட்பு குழு, இயற்கை மீட்பு குழு, வன பாதுகாப்பு குழு என்று கோவையில் நிறைய இயற்கை பாதுகாப்பு அமைப்புகள் இதுபோன்ற சேவைகளை மனமுவந்து செய்து கொண்டுதான் இருக்கின்றன. அதன் பயனாக, கோவையை சுற்றியுள்ள பல நீர்நிலைகள் பளிச்சென பராமரிக்கப்பட்டு, அதில் மழைநீர் நிரம்பியிருப்பதை காண முடிகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டபோதும் கோவையில் அப்படியோரு நிலை ஏற்படவில்லை. மாறாக, கடந்த ஒராண்டில், மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் சராசரியாக 3.37 மீட்டர் வரை உயர்ந்துள்ளது. அதற்கு காரணமும், இங்குள்ள நீர்நிலைகளில் தண்ணீர் சேமிக்கப்பட்டிருப்பதுதான். கோவையில் பராமரிக்க வேண்டிய நீர்நிலைகள் இன்னும் இருக்கின்றன. அவற்றையும் அந்தந்த பகுதி தன்னார்வலர்கள் தத்தெடுத்து பராமரிக்கத்தான் போகிறார்கள். அதன் மூலம் தமிழகத்திற்கே கோவை முன்னுதாரமாகவும் திகழலாம். இதுபோல, பிற மாவட்டங்களிலும் ஏரி, குளம், குட்டை, கேணி, கன்மாய் என கவனிக்கப்படாமல் விடப்பட்ட எத்தனையோ நீர்நிலைகள் இருக்கின்றன. அரசை மட்டுமே எதிர்பார்க்காமல், அந்தந்த பகுதி தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து அற்றை மீட்டெடுத்து மழைநீரை சேகரித்து வைத்தால் எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து தப்பிக்கலாம். நீர்நிலைகளை தன்னார்வ அமைப்புகளே பராமரிக்கலாம்; அவர்களுக்கு அரசு அதிகாரிகள் உதவ வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டதன் மூலம், தன்னார்வலர்களுக்கான கதவு தாராளமாய் திறக்கப்பட்டிருக்கிறது. அதை பயன்படுத்தி, அனைவரும் கைகோர்ப்போம்... நீர்நிலைகளை மீட்டெடுத்து மழைநீரை சேகரிப்போம்!


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:27 குடியரசு தினவிழாவில் காதல் பாடல்களுக்கு நடனம்

குடியரசு தினவிழாவில் காதல் பாடல்களுக்கு நடனம்

play button 05:06 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 26-01-2020 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 26-01-2020 | Short News Round Up | Dinamalar

play button 00:51 இந்தியா 2-வது வெற்றி: ராகுல், ஸ்ரேயாஸ் விளாசல்

இந்தியா 2-வது வெற்றி: ராகுல், ஸ்ரேயாஸ் விளாசல்

play button 01:04 வூஹான் நகரில் சிக்கிய 250 இந்திய மாணவர்கள்

வூஹான் நகரில் சிக்கிய 250 இந்திய மாணவர்கள்

play button 01:17 வீர தீரச் செயல் விருதுகள்; முதல்வர் வழங்கினார்

வீர தீரச் செயல் விருதுகள்; முதல்வர் வழங்கினார்

play button 05:21 மாவட்டங்களில்  குடியரசு தினவிழா கலெக்டர்கள்  கொடியேற்றினர்

மாவட்டங்களில் குடியரசு தினவிழா கலெக்டர்கள் கொடியேற்றினர்

play button 01:02 குடியரசு தின விழாவில் காங். தலைவர்கள் அடிதடி

குடியரசு தின விழாவில் காங். தலைவர்கள் அடிதடி

play button 03:48 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 26-01-2020 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 26-01-2020 | மாலை 4 மணி | Dinamalar

play button 05:29 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 26-01-2020 | பகல் 12 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 26-01-2020 | பகல் 12 மணி | Dinamalar

play button 01:42 விளையாட்டுச் செய்திகள் | Sports News 25-01-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 25-01-2020 | Sports Roundup | Dinamalar

play button 16:09 என்ன செய்தார் ஈ.வெ.ரா ? ஃபாத்திமா கேள்வி

என்ன செய்தார் ஈ.வெ.ரா ? ஃபாத்திமா கேள்வி

play button 01:33 வேம்பு பொருட்கள்... இது வேற லெவல்...

வேம்பு பொருட்கள்... இது வேற லெவல்...

play button 04:16 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 25-01-2020 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 25-01-2020 | Short News Round Up | Dinamalar

play button 03:21 அரசு கல்லூரி ஆசிரியர் நியமன குழப்பம் நீடிப்பு

அரசு கல்லூரி ஆசிரியர் நியமன குழப்பம் நீடிப்பு

play button 00:39 கார் மோதிய விபத்து 5 பேர் பலி

கார் மோதிய விபத்து 5 பேர் பலி

play button 00:30 மாவட்ட கால்பந்து பைனலில் கார்மல் கார்டன்,  கோபால் நாயுடு

மாவட்ட கால்பந்து பைனலில் கார்மல் கார்டன், கோபால் நாயுடு

play button 03:50 பிரேசில் உறவில்     பழைய கதை எதிரி முதல் விருந்தினர் வரை

பிரேசில் உறவில் பழைய கதை எதிரி முதல் விருந்தினர் வரை

play button 00:24 கேரளாவிற்கு கடத்த முயன்ற 2,750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவிற்கு கடத்த முயன்ற 2,750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

play button 00:33 மருத்துவமனையில் தீ: புகையால் நோயாளிகள் திணறல்

மருத்துவமனையில் தீ: புகையால் நோயாளிகள் திணறல்

play button 01:23 கொரனோ வைரஸ்: சீனாவில் புதுக்கோட்டை மாணவர் தவிப்பு

கொரனோ வைரஸ்: சீனாவில் புதுக்கோட்டை மாணவர் தவிப்பு

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X