Advertisement

கொள்ளிடம் ஆற்றில் வரலாற்று தடயங்கள்

பொது ஜூலை 08,2019 | 15:00 IST

Share

தஞ்சாவூர், திருவையாறு வட்டம் பெரும்புலியூர் கல்வெட்டினைக் கொண்டு தொல்லியல் துறை ஓய்வு பெற்ற எழுத்தர் இராசேந்திரன், தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் கண்ணதாசன், கல்வெட்டு ஆர்வலர் தில்லை கோவிந்தராஜன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொள்ளிடம் ஆற்றில் கிடைத்த தடயங்கள் குறித்து அவர்கள் கூறுகையில், சோழர்காலத்து மானீஸ்வரர் கோயில் பற்றி ஆராய்ந்தபோது கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் செம்பாறை தளத்தில் சில கருங்கற்கள் குவியல்கள் இருப்பதாகவும், அவை கட்டுமான கற்களாக இருப்பதால், இவ்இடத்தில் திருமானீஸ்வரர் கோயில் இருந்து அழிந்திருக்கலாம் என்றனர். மேலும் கருப்பு, சிவப்பு பானையோடுகளும் சங்க இலக்கியமான பட்டினப்பாலையில் 76 வரியில் சுடுமண்கிணற்றைப் பற்றிய குறிப்பின் படி 10 க்கு மேற்பட்ட உறைகிணறுகள் காணப்படுவதால்,இவ்விடம் சோழர் கால வாழ்விடப்பகுதியாக இருந்திருக்கலாம். எனவே, இதுபற்றி வரலாற்று உண்மைகளை உலகிற்கு எடுத்துரைக்க தொல்லியல்துறை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X