Advertisement

போலீசை அரிவாளால் வெட்டிய வியாபாரி

சம்பவம் ஜூலை 09,2019 | 00:00 IST

Share

திருச்சி மாவட்டம், அரியமங்கலம் பகுதியில், மீன் கடை நடத்தி வருபவர், இஸ்மாயில். போதை பழக்கத்திற்கு அடிமையான இவர், திங்களன்று அரியமங்கலம் பகுதியில் உள்ள கடைகளில், செலவுக்கு பணம் கேட்டு, தகராறு செய்துள்ளார். அங்கு வந்த காவலர் ஹரிஹரன், தகராறு குறித்து விசாரித்த போது, ஆத்திரமடைந்த இஸ்மாயில், அரிவாளால், ஹரிஹரனை தலை மற்றும் கைப் பகுதிகளில் வெட்டி விட்டு தப்பியோடினார். படுகாயமடைந்த ஹரிஹரன் அரியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தண்டவாளம் பகுதியில் பதுங்கி இருந்த இஸ்மாயிலை, அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X