Advertisement

அரசை நம்பி பயனில்லை; களமிறங்கிய விவசாயிகள்

பொது ஜூலை 12,2019 | 14:18 IST

Share

கிருஷ்ணகிரியை அடுத்த காவேரிபட்டணம் அருகேயுள்ள அத்திகுட்டை ஏரியில் இருந்து, நாகல் ஏரிக்கு தண்ணீர் செல்ல 2004ல் 4 கி.மீ., நீளத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டது. இதை முறையாக பராமரிக்காததால் மண்சரிந்து, புதர்மண்டி பயனற்று போனது. கால்வாயை தூர்வார வலியுறுத்தி விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், அப்பகுதி விவசாயிகளே ஒன்றிணைந்து கால்வாயை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கால்வாய் 30 அடி ஆழம் உள்ளதால் இயந்திரத்தை கொண்டு சுத்தம் செய்ய முடியாமல், விவசாயிகளே உடல் உழைப்பின் மூலம் 20 நாட்களாக தூர்வாரி வருகின்றனர். இந்த கால்வாயை தூர்வாரினால் மட்டுமே 550 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால், விவசாயிகளே தூர் வாரும் பணியை தொடர்கின்றனர். அரசுதான் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்காமல், தங்களுக்கான தேவையை நிறைவு செய்துகொள்ள விவசாயிகள் ஒருங்கிணைந்து களமிறங்கியிருப்பது வரவேற்கத்தக்கதுதான்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X