அரசியல் » மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயம் ஜூலை 12,2019 16:00 IST
புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில் முதன்முதலாக மழை நீர் சேமிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்தார். பின்னர் பேட்டியளித்த அவர், இதுபோன்று அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகளில் இந்தத் திட்டம் படிப்படியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் புதிதாக வீடு கட்டுபவர்கள் இனி வரும் காலங்களில் கட்டாயம் மனழநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும், இல்லையெனில் அவர்களுக்கு வீடு கட்ட அனுமதி கிடையாது என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்..
வாசகர் கருத்து