விளையாட்டு » மாநில கூடைப்பந்து; கஸ்டம்ஸ் சாம்பியன் ஜூலை 13,2019 18:13 IST
கோவை, பி.எஸ்.ஜி., ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், பி.எஸ்.ஜி., கோப்பைக்கான மாநில கூடைப்பந்து போட்டி அவிநாசிரோடு, பி.எஸ்.ஜி., டெக் கல்லூரியில் நடந்தது. இதன் இறுதி லீக் போட்டியில், சென்னை கஸ்டம்ஸ் அணி 92-74 புள்ளிக்கணக்கில் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் அணியை வென்றது. சென்னை அரைஸ் ஸ்டீல் அணி 87-81 புள்ளிக்கணக்கில் திண்டுக்கல் அணியை வென்றது. 6 லீக் போட்டியின் முடிவில் சென்னை கஸ்டம்ஸ் அணி முதலிடத்தை பிடித்தது. தமிழ்நாடு சிறப்பு போலீஸ் அணி 2ம் இடமும், சென்னை அரைஸ் ஸ்டீல் அணி 3ம் இடமும், திண்டுக்கல் அணி 4ம் இடமும் பிடித்தன.
வாசகர் கருத்து