Advertisement

பிரான்ஸ் தேசிய தின விழா கண்கவர் வாணவேடிக்கை

பொது ஜூலை 16,2019 | 12:00 IST

Share

1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சியை பாரீஸ் நகரில் உள்ள பஸ்தி என்ற சிறைச்சாலையை மக்கள் புரட்சி மூலம் தகர்த்து முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவினர். இந்த தினம் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. புதுச்சேரியில் பிரெஞ்ச் தேசிய தினம் வழக்கமான உற்சாகாத்துடன் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பிரெஞ்ச் தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரெஞ்ச் துணை தூதர் கேத்ரின் ஸ்வார்ட், முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து இரவு கடற்கரை சாலை பிரெஞ்ச் தூதரகம் முன்பு வண்ணமயமான வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. வானத்தில் சிதறிய மத்தாப்பு சிதறல்களை கண்டு பார்வையாளர்கள் ஆரவாரத்தோடு கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.. சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற வாண வேடிக்கை நிகழ்ச்சியை சுற்றுலாப் பயணிகள் உட்பட ஆயிரக்கணக்கனோர் கண்டு ரசித்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X