ஆன்மிகம் வீடியோ » புஷ்ப பல்லக்கில் மலையப்ப சுவாமி பவனி ஜூலை 18,2019 13:55 IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனி வார ஆஸ்தான உற்சவம் நடந்து வருகிறது. இதையொட்டி, 3 டன் எடை கொண்ட மலர்களால் தயார் செய்யப்பட்ட புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளிய ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி கோயில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சேலத்தை சேர்ந்த பக்தர் மணிசங்கர் அளித்த நன்கொடை மூலம் 15 ஊழியர்கள் பிரம்மாண்ட புஷ்ப பல்லக்கை தயார் செய்தனர். ரோஜா, மல்லி, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட ஒன்பது வகையான மலர்கள் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து வகை மலர்கள் என 3 டன் மலர்களால் புஷ்ப பல்லக்கு உருவாக்கப்பட்டது.
வாசகர் கருத்து