சம்பவம் » பாழடைந்த வீட்டில் பீரங்கி குண்டு கண்டுபிடிப்பு ஜூலை 18,2019 19:00 IST
கோவை ராம்நகரிலுள்ள பாழடைந்த வீட்டில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் பீரங்கி குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை கைப்பற்றிய போலீசார் தனி இடத்தில் வைத்து செயலிழக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ பீரங்கியில் பயன்படுத்தப்படும் அந்த குண்டு 30 ஆண்டுகள் பழமையானது என தெரிய வந்துள்ளது. ராம்ஜி என்பவருக்கு சொந்தமான அந்த வீட்டில், ராணுவத்தில் பணியாற்றிய யாராவது குண்டை கொண்டு வந்து வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து