Advertisement

விளையாட்டு » 2 நாடுகள் கொண்டாடும் உலக கோப்பை வெற்றி வீரன் ஜூலை 19,2019 17:55 IST

விளையாட்டு » 2 நாடுகள் கொண்டாடும் உலக கோப்பை வெற்றி வீரன் ஜூலை 19,2019 17:55 IST

உலக கோப்பையை இங்கிலாந்து வெல்ல முக்கிய காரணமான பென் ஸ்டோக்ஸ், இந்த ஆண்டின் மிகச் சிறந்த நியூசிலாண்டர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இது எப்படி சாத்தியம் என்று திகைக்க வேண்டாம். இரண்டு காரணங்களை கேளுங்கள், கை தட்டுவீர்கள். நியூசிலாந்தில் உள்ள க்ரைஸ்ட் சர்ச் தான் ஸ்டோக்சின் பிறந்த ஊர். நியூசிலாந்தின் மவோரி வம்சத்தை சேர்ந்தவர் அவர். இது பிறப்பால் வந்த காரணம். அடுத்தது சுவாரசியமான வளர்ப்பு காரணம். நியூசிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் ஸ்டோக்ஸ் அடுட் ஆகாமல் 84 ரன் விளாசியதை பார்த்திருப்பீர்கள். ஒரு பந்து அவரது பேட்டில் பட்டு எகிறியபோது, எதிரணி ஃபீல்டர் தடுத்து பிடித்து, ஸ்டோக்சை ரன் அவுட் ஆக்க ஸ்டம்பை குறிபார்த்து வீசினார். ஆனால் பந்து ஸ்டம்பை தாக்காமல் ஸ்டோக்ஸ் மீது பட்டு திரும்பி ஓடி எல்லைக் கோட்டை தொட்டது. இந்த ஓவர் த்ரோவால் இங்கிலாந்துக்கு 4 ரன் கூடுதலாக கிடைத்தது. அப்போது ஸ்டோக்ஸ் ஒரு காரியம் செய்தார். அம்பயரிடம் போய், “இந்த 4 ரன் எங்களுக்கு வேண்டாம். கழித்து விடுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார். அம்பயர்கள் திகைத்து போனார்கள். ஜெயிப்பதற்கு 3 பந்தில் 9 ரன் எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது இங்கிலாந்து. இந்த ஓவர் த்ரோவால் அது 2 பந்தில் 3 ரன் எடுக்க வேண்டிய ஈசியான கட்டத்துக்கு வந்தது. ஒரு இங்கிலாந்து வீரனே இப்படி அந்த வாய்ப்பை கெடுப்பானா என்று அம்பயர்களுக்கு ஆச்சரியம். ஸ்டம்புக்கு வீசிய பந்து பேட்ஸ்மன் மீது பட்டு ஏதாவது இடைவெளியில் விழுந்து ஓடினாலும், பேட்ஸ்மன் அதை சாக்கிட்டு தொடர்ந்து ஓடாமல் நிறுத்திவிட வேண்டும் என்பது மரபு. ஆனால், அப்படி ஓடிய பந்து எல்லையை தொட்டுவிட்டால் 4 ரன் நிச்சயம்; அதில் அம்பயரே தலையிட முடியாது. அதன்படி அம்பயர்கள் கை விரித்தனர். ஸ்டோக்ஸ் அப்படியே மண்டியிட்டு, நியூசிலாந்து ஃபீல்டர்களிடம் மன்னிப்பு கேட்டார். அநியாயமாக உங்களிடம் இருந்து 4 ரன்களை அபகரித்து விட்டேன்; என்னை மன்னியுங்கள் என்று கெஞ்சுவது போலிருந்தது அந்த காட்சி. நியூசிலாந்து வீரர்கள் நெகிழ்ந்து விட்டார்கள். ஸ்போர்ட்ஸ்மன்ஷிப் என்று சொல்லப்படும் உயரிய விளையாட்டு பண்பாடுதான் ஸ்டோக்சை அவ்வாறு மண்டியிட வைத்தது என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. ஆட்ட நாயகன் விருதை அவர்தான் வென்றார். ஆட்டத்தை பார்த்தவர்களின் இதயங்களையும் அவரே வென்றார். இப்போது சொல்லுங்கள், நியூசிலாந்தும் அவரை சொந்தம் கொண்டாடுவது தவறில்லைதானே? இங்கிலாந்து அரசும் பென் ஸ்டோக்சுக்கு 'சர்' பட்டம் வழங்க முடிவு எடுத்து விரைவில் அறிவிக்க இருக்கிறது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 10:51 போணி ஆகாத நாத்திகம்! கிஷோர் கே சுவாமி கிண்டல்

போணி ஆகாத நாத்திகம்! கிஷோர் கே சுவாமி கிண்டல்

play button 10:43 தினமலர் 'பட்டம் க்விஸ்' : நாசா செல்லும் ஆக்ஸ்வர்ட் பள்ளி மாணவர்கள்

தினமலர் 'பட்டம் க்விஸ்' : நாசா செல்லும் ஆக்ஸ்வர்ட் பள்ளி மாணவர்கள்

play button 01:26 விளையாட்டுச் செய்திகள் | Sports News 24-01-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 24-01-2020 | Sports Roundup | Dinamalar

play button 01:22 இந்திய அணி வெற்றி ராகுல்,ஸ்ரேயாஸ் அபாரம்

இந்திய அணி வெற்றி ராகுல்,ஸ்ரேயாஸ் அபாரம்

play button 02:17 ரஜினி பேச்சு ரைட்டா, தப்பா?

ரஜினி பேச்சு ரைட்டா, தப்பா?

play button 00:31 பண்டித் நேரு  பள்ளியில்  தடகள போட்டி

பண்டித் நேரு பள்ளியில் தடகள போட்டி

play button 00:34 பாலிடெக்னிக்  கால்பந்து போட்டி: பைனலில் மதுரை, ஈரோடு

பாலிடெக்னிக் கால்பந்து போட்டி: பைனலில் மதுரை, ஈரோடு

play button 04:59 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 24-01-2020 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 24-01-2020 | Short News Round Up | Dinamalar

play button 00:39 கல்லூரிகள் ஹாக்கி போட்டி: சி.ஐ.டி., அணி கோல் மழை

கல்லூரிகள் ஹாக்கி போட்டி: சி.ஐ.டி., அணி கோல் மழை

play button 00:42 மாவட்ட கால்பந்து: அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள்

மாவட்ட கால்பந்து: அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள்

play button 00:42 மாணவிகள் பூப்பந்து  போட்டி

மாணவிகள் பூப்பந்து போட்டி

play button 02:23 நடிகர் சங்கத்திற்கு  3 மாதத்திற்குள் மறுதேர்தல்

நடிகர் சங்கத்திற்கு 3 மாதத்திற்குள் மறுதேர்தல்

play button 01:04 குரூப் 4 முறைகேடு  99 தேர்வர்கள் நீக்கம்  தாசில்தார்கள் கைது

குரூப் 4 முறைகேடு 99 தேர்வர்கள் நீக்கம் தாசில்தார்கள் கைது

play button 17:46 தர்மத்திற்கு கிடைத்த வெற்றி - ஐசரி கணேஷ்

தர்மத்திற்கு கிடைத்த வெற்றி - ஐசரி கணேஷ்

play button 00:48 சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: டிஜிபி

சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: டிஜிபி

play button 01:00 ரஜினிக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட் டிஸ்மிஸ்

ரஜினிக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட் டிஸ்மிஸ்

play button 00:32 ரதசப்தமி பெருவிழா துவக்கம்

ரதசப்தமி பெருவிழா துவக்கம்

play button 00:32 ஆஞ்சநேயருக்கு 1008 குடம் பாலாபிஷேகம்

ஆஞ்சநேயருக்கு 1008 குடம் பாலாபிஷேகம்

play button 01:02 தை அமாவாசை தீர்த்தவாரி

தை அமாவாசை தீர்த்தவாரி

play button 00:26 பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து

பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X