Advertisement

மாமூலில் புரளும் சோதனைச்சாவடி; சோதனையில் அம்பலம்

பொது ஜூலை 19,2019 | 19:12 IST

Share

சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரியில் போக்குவரத்து துறை சோதனைச்சாவடி உள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகாவை இணைக்கும் இந்த சாலையில் இந்த சோதனைச்சாடி வழியாகத்தான் தினமும் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு, போக்குவரத்து, வனத்துறை மற்றும் காவல்துறை என மூன்று சோதனை சாவடிகள் உள்ளன. இந்த வழியாக செல்லும் அனைத்து சரக்கு லாரி டிரைவர்களிடம், புரோக்கர்கள் மூலம் மாமூல் வசூலித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில் லஞ்சஒழிப்பு போலீசார் டிரைவர்கள் போல் மாறுவேடத்தில் போக்குவரத்து சோதனைச்சாவடியில் சோதனையிட்டனர். அதில் கணக்கில் வராத 66 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இது ஒருநாளில் மட்டும் வசூல் செய்த பணமாகும். அதன்படி, மாதத்திற்கு லட்சக்கணக்கான வசூலிக்கப்பட்டது அம்பலமானது. இது தொடர்பாக புரோக்கர்களிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X