Advertisement

விளையாட்டு செய்திகள்

விளையாட்டு ஜூலை 20,2019 | 18:30 IST

Share

இந்தியாவுக்கு 2 தங்கம் ஒடிசா மாநிலம் கட்டாக்கில், காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் அணிகளுக்கான பைனலில் மணிகா பத்ரா, அர்ச்சனா, மாதுரிகா அடங்கிய இந்திய அணி 3-0 என இங்கிலாந்து அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. ஆண்கள் பிரிவிலும் இந்திய அணி 3-2 என இங்கிலாந்தை வீழ்த்தி தங்கம் வென்றது. ............ அல்ஜீரியா சாம்பியன் எகிப்தில் ஆப்ரிக்க நாடுகளுக்கு இடையிலான கால்பந்து கோப்பை நடந்தது. பைனலில் செனகல், அல்ஜீரியா அணிகள் மோதின. போட்டியின் இரண்டாவது நிமிடத்தில் அல்ஜீரியா வீரர் பாக்தாத் ஒரு கோல் அடித்தார். இதற்கு எதிரணியால் பதிலடி தர முடியவில்லை. அல்ஜீரியா அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. .............. இளம் இந்தியா ஏமாற்றம் இந்தியா 'ஏ', வீண்டீஸ் 'ஏ' அணிகள் மோதிய அதிகாரப்பூர்வமற்ற நான்காவது ஒரு நாள் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. விண்டீஸ் அணிக்கு ராஸ்டன் சேஸ் அரை சதம் விளாச, 50 ஓவரில் 298 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் அக்சர் படேல் 81 ரன்கள் எடுத்து போதும், 50 ஓவரில் 293 ரன்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது. ............... அரையிறுதியில் பயஸ் ஜோடி அமெரிக்காவின் நியூபோர்ட் நகரில், 'ஹால் ஆப் பேம்' ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், நியூசிலாந்தின் மார்கஸ் டேனியல் ஜோடி 6-4, 5-7, 14-12 என ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டன், சுவீடனின் ராபர்ட் லிண்ட்ஸ்டெட் ஜோடியை வீழ்த்தியது. .............


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X