Advertisement

தறிகெட்டு ஓடிய தனியார் பேருந்து

சம்பவம் ஜூலை 21,2019 | 12:00 IST

Share

புதுச்சேரியில் இருந்து சனியன்று இரவு 7:30 மணிக்கு தனியார் பஸ் பாகூருக்கு புறப்பட்டது. பஸ்சை ஏம்பலத்தை சேர்ந்த அருள் ஓட்டி சென்றார். முதலியார்பேட்டை ரயில்வே கேட்டை கடந்த பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதனைக் கண்ட மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இருப்பினும் பஸ் முன்னாள் சென்ற ஸ்கூட்டர், டாடா ஏஸ் மற்றும் எதிரே புதுச்சேரி நோக்கி வந்த கார் மீது மோதி, ஏ.எப்.டி., மில் எதிரில் உள்ள தடுப்புகட்டையில் மோதி நின்றது. இதனை கண்டு ஆவேசமடைந்த பொதுமக்கள், விபத்து ஏற்படுத்திய பஸ்சின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதோடு, டிரைவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். முதலியார்பேட்டை போலீசார் விரைந்து வந்து, பொதுமக்களிடம் சிக்கிய டிரைவரை மீட்டு, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். விபத்தில் காயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X