Advertisement

ஆமா... நிறைய கொலை நடக்குது நாங்க என்ன பண்றது? அமைச்சர் அலட்சியம்

அரசியல் ஜூலை 24,2019 | 17:44 IST

Share

திருநெல்வேலியில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, கணவர் உட்பட மூவர் வெட்டிக் கொல்லப்பட்டனர். சென்னையில் நடுரோட்டில் மாணவர்கள் அரிவாளால் வெட்டிக் கொண்டு வெறியாட்டம் ஆடினர். இந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் கொடூரக் கொலைகள் அதிகரித்து விட்டதே என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் நிருபர்கள் கேட்டனர். ''பணத்திற்காக கொலை, கொள்ளை நடக்கிறது; எல்லா ஆட்சிகளிலும்தான் கொலை நடக்கிறது. இதற்கும் அதிமுக ஆட்சிக்கும் என்ன சம்பந்தம்? நாங்க என்ன செய்ய முடியும்? என அமைச்சர் கூறிய பதிலைக் கேட்டு நிருபர்கள் ஆடிப் போனார்கள். கொலை, வன்முறை போன்ற குற்றங்களை தடுத்து, அமைதியை நிலைநாட்ட வேண்டியது போலீசின் தலையாய பணி. அந்த போலீஸ் துறை முதல்வர் பழனிச்சாமி வசம்தான் உள்ளது என்பதை அமைச்சர் மறந்துவிட்டார் போல.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X