Advertisement

விலையின்றி தவிக்கும் பார்ம்ரோஸ் விவசாயிகள்

விவசாயம் ஜூலை 24,2019 | 18:53 IST

Share

தருமபுரி பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால், வறட்சியில் வளரும் பார்ம்ரோஸ் பயிர்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அன்னசாகரம், நூலஅள்ளி, லளிகம், கோட்டப்பள்ளி, நரிப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் பார்ம்ரோஸ் பயிர் செய்யப்படுகிறது. பார்ம்ரோஸ் ஆயில் வாசனை திரவியமாகவும், சோப், சென்ட், ஊதுபத்தி உள்ளிட்டவை தயார் செய்யும் மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. எண்ணெய் எடுத்த பின் இதன் புல் கால்நடைகளுக்கு உணவாகவும் பயன்படுகிறது. பார்ம்ரோஸ் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயனடைந்து வந்த நிலையில், திடீரென ஆயில் விலை குறைந்ததால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ ஆயில் 3,200 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 1,300 ரூபாயாக குறைந்துள்ளது. ஆயில் விலையை இடைத்தரகர்கள் நிர்ணயம் செய்வதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசே விலை நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பார்ம் ரோஸ் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X