Advertisement

தேசிய கார் பந்தயம் நிறைவு

விளையாட்டு ஜூலை 29,2019 | 13:44 IST

Share

கோவை செட்டிபாளையத்திலுள்ள கரி மோட்டார் ஸ்பீடு வேயில் தேசிய கார் சாம்பியன்ஷிப் முதல் சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் எல்.ஜி.பி., பார்முலா 4 பந்தயத்தில் சென்னை வீரர் விஷ்ணுபிரசாத் முதலிடம் பிடித்தார். ராகுல் ரங்கசாமி இரண்டாமிடமும், அஷ்வின் தத்தா மூன்றாமிடமும் பிடித்தனர். போட்டியின் போது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதால் வீரர்கள் சிலர் பாதியில் விலகினர். விபத்தில் வீரர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஜே.கே.டயர் சுஸூகி ஜிக்சர் கோப்பைக்கான பைக் பந்தயத்தில் பெங்களூருவின் சையது முசமில் அலி, புனேவின் டனாய் கெய்க்வாட், கோவையின் சித்தார் சாஜன் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X