Advertisement

சினிமா.. சினிமா.. |Cinema News 30-07-2019| Cinema Roundup| Dinamalar

சினிமா வீடியோ ஜூலை 30,2019 | 17:50 IST

Share

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகர் சரவணனும் பங்கேற்றுள்ளார். கடந்தவார நிகழ்ச்சியில் பெண்களை உரசுவதற்கே ஒரு கூட்டம் பஸ்ஸில் செல்கிறது என கமல் பேசினார். அப்போது நடிகர் சரவணன், கல்லூரியில் படிக்கும் காலத்தில் நானும் அது போல் செய்தேன் என்றார். இதற்கு கமலோ, அங்கிருந்தவர்களோ கண்டனம் தெரிவிக்கவில்லை. பார்வையாளர்கள் உட்பட பலரும் கைதட்டி ரசித்தனர். இதற்கு பாடகி சின்மயி கடும் கண்டனம் தெரிவித்தார். சமூக வலைதளங்களில் சரவணன், கமல் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. பிரச்னை பெரிதாவதை உணர்ந்த டிவி சேனல், உடனடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே சரவணனை மன்னிப்பு கேட்க வைத்துள்ளது. சரவணன் மன்னிப்பு கேட்டது நேற்றைய நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பானது. அதில், ‛‛பஸ்ஸில் பெண்களிடம் அது போன்று செய்யாதீர்கள் என சொல்லவே முற்பட்டேன். அது முடியாமல் போய்விட்டது. நான் பேசியது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்'' என தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X