Advertisement

மார்டின் நிறுவன காசாளர் கொலை; மருத்துவ அறிக்கை தாக்கல்

பொது ஜூலை 30,2019 | 20:14 IST

Share

கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனங்களில் ஏப்ரல் 30 ம் தேதி வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரியில் காசாளராக பணிபுரிந்து வரும் கோவை வடமதுரையை சேர்ந்த பழனிச்சாமியிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 3 ம் வெள்ளியங்காடு அருகே உள்ள குட்டையில் வெள்ளியங்காடு குளத்தில் பழனிசாமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை பெற மறுத்த உறவினர்கள், விசாரணையின்போது பழனிசாமி தாக்கப்பட்டதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி மேஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை தாக்கப்பட்டது. இதையடுத்து, பழனிசாமியின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, 2வது முறையாக கோவை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த அறிக்கையை, மருத்துவ குழுவில் இடம்பெற்றிருந்த சம்பத்குமார், கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிசாமி, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X