Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 31-07-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு ஜூலை 31,2019 | 17:38 IST

Share

கோப்பை வென்றார் பிரக்னநந்தா டென்மார்க்கின் கோபன்ஹேகனில் எக்டிராகன் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் 10வது மற்றும் கடைசி சுற்றில் தமிழக வீரர் பிரக்னநந்தா, அமெரிக்காவின் சேவியன் சாமுவேலிடம் 'டிரா' செய்தார். 10 சுற்றில் 7 வெற்றி, 3 'டிரா' செய்த 13 வயது வீரரான பிரக்னநந்தா, முதலிடம் பெற்று கோப்பை வென்றார். கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து பெற்ற பின் இவர் வென்ற முதல் கோப்பை இது. --------------------- அஷ்வினி ஜோடி அபாரம் தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா, ரான்கிரெட்டி ஜோடி, ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மலேசியாவின் சன் பெங் சூன், கோ லியு யிங் ஜோடியை 21-18, 18-21, 21-17 என வென்று அசத்தியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகளில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், காஷ்யப், பிரனாய் வெற்றி பெற்றனர். ---------------------- பிரித்விக்கு 8 மாதம் தடை மகாராஷ்டிராவை சேர்ந்தவர் பிரித்வி ஷா 19. கடந்த பிப்ரவரி மாதம் சையது முஸ்தாக் அலி டிராபி தொடரில் பங்கேற்ற இவரிடம், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இவரது சிறுநீர் மாதிரியில் தடை செய்யப்பட்ட 'டெர்புடலைன்' என்ற மருந்து இருந்தது உறுதி செய்யப்பட்டது. இருமல் காரணமாக சுவாசக்குழாய் பாதிப்புக்கு மருந்து பயன்படுத்திய போது, கவனக்குறைவாக இது நடந்துள்ளதாக பிரித்வி தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட பி.சி.சி.ஐ., ஊக்கமருந்து தடுப்புக் குழு, எட்டுமாதம் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்தது. --------------------- கெய்ல் 'சிக்சர்' மழை கனடாவில் குளோபல் 'டுவென்டி-20' லீக் தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் மான்ட்ரியல் அணிக்கு எதிராக 'டாஸ்' வென்ற வான்கூவர் அணி கேப்டன் கெய்ல், பேட்டிங் தேர்வு செய்தார். இப்போட்டியில் கெய்ல் 12 சிக்சர், 7 பவுண்டரி உட்பட 54 பந்துகளில் 122 ரன்கள் விளாசினார். தவிர 'டுவென்டி-20' அரங்கில் 1000 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் ஆனார் கெய்ல். வான்கூவர் அணி, 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 276 ரன்கள் குவித்தது. பின் மைதானத்துக்கு 61 கி.மீ., துாரத்தில் பலத்த இடி மின்னல் ஏற்பட்டது. ரசிகர்கள் பாதுகாப்பு காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X