Advertisement

இரட்டை கொலையில் அலட்சியம்; இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

பொது ஆகஸ்ட் 02,2019 | 05:37 IST

Share

கரூர், முதலைப்பட்டியில் உள்ள 198 ஏக்கர் ஏரியை பலர் ஆக்ரமித்து விவசாயம் செய்துவருகின்றனர். அதை மீட்க உத்தரவிடக்கோரி திருச்சியை சேர்ந்த விவசாயி வீரமலையும் அவரது மகன் நல்லதம்பியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஏரியை மீட்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஆக்ரமிப்பாளர்கள் கும்பல் வீரமலை, நல்லதம்பி இருவரையும் வெட்டி கொலை செய்தது. இந்த வழக்கில் 6 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கூலிப்படைத் தலைவன் ஜெயகாந்தன் திருச்சி கோர்ட்டில் சரணடைய வந்தபோது, திடீரென அங்கிருந்து சென்றுவிட்டான். இரட்டை கொலை தொடர்பாக திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் விசாரணை மேற்கொண்டபோது, ரவுடி ஜெயகாந்தன் கொலைமிரட்டல் விடுப்பது பற்றி வீரமலை புகார் கொடுத்தும், அதை குளித்தலை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் கண்டுகொள்ளாமல் இருந்தது தெரியவந்தது. இரட்டை கொலையில் உரிய விசாரணை நடத்தாமல் இருந்ததோடு, குற்றவாளிகளை கைது செய்ய எந்த முயற்சியும் எடுக்காததால், குளித்தலை இன்ஸ்பெக்டர் பாஸ்கரை சஸ்பெண்ட் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, ரவுடி ஜெயகாந்தனை தனிப்படை போலீசார் மதுரையில் கைது செய்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X