Advertisement

ஆடிப்பெருக்கு ஆனந்தம்

பொது ஆகஸ்ட் 03,2019 | 19:36 IST

Share

ஆடிபெருக்கு விழாவையொட்டி, ஈரோடு பவானி கூடுதுறையில் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு படையலிட்டு சமர்ப்பணம் செய்தனர். புதுமண தம்பதிகள், மாலைகள் மற்றும் முளைப்பாரியை ஆற்றில் விட்டு சூரிய பகவானை வழிபட்டனர் பவானிசாகர் அணையில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா வந்து ஆடிப்பெருக்கை கொண்டாடினர். பூங்கா, படகு சவாரி, நீர் வீழ்ச்சிகளில் விளையாடி மகிழ்ந்தனர். ஆடி 18 அன்று மட்டுமே அணையின் மேல் பகுதியில் மக்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்பதால், பலரும் ஆர்வத்துடன் வந்து அணையை ரசித்து சென்றனர். கரூரில், மாயனூர் கதவணை அமைந்துள்ள செல்லாண்டியம்மன் கோயிலில் ஆடிபெருக்கையொட்டி ஏராளமான மக்கள் படையலிட்டு காவிரித்தாயை வணங்கினர். புதுமணத்தம்பதிகள் மற்றும் பெண்கள் தாலிக்கையிறை மாற்றிக்கொண்டனர். குளித்தலையில், கடம்பன் துறை காவிரி ஆற்றில் குடும்பம் சகிதமாக குவிந்த மக்கள், நீராடி காவிரித்தாயை வணங்கி சென்றனர். சேலம், அஸ்தம்பட்டி மாரியம்மன் கோயிலில் ஆடிபெருக்கையொட்டி, அம்மனுக்கு ஒரு லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. நவதானியம் மற்றும் அரிசி வகை உணவுகள் படைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, தருமபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராளமான மக்கள் நீராடி, குலதெய்வ வழிபாடு செய்தனர். சுற்றுலாப்பயணிகளின் வருகையும் அதிகரித்திருந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X