Advertisement

ஆடிப்பூரம் வழிபாடு

ஆன்மிகம் வீடியோ ஆகஸ்ட் 04,2019 | 12:00 IST

Share

வேலூர், திருப்பத்தூர் அருகேயுள்ள ஆண்டியப்பனூர் கிராமத்தின் காட்டுப்பகுதியில் மிகவும் பழைமை வாய்ந்த பாப்பாத்தியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டியப்பனூரை சுற்றியுள்ள பத்து கிராம மக்கள் காட்டுப்பகுதியில் உள்ள கோவிலிற்கு வந்து வழிபாடு நடத்தினர். கிராமங்களிலிருந்து பூங்கரகங்களுடன் மேளதாளங்கள் முழங்க பாரம்பரிய நடனமான கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், உள்ளிட்ட நடனங்களுடன் பல கிலோமீட்டர் நடனமாடிய வண்ணம் வந்து சாமியை தரிசனம் செய்தனர். இந்த ஆலயத்தில் வழிபாடு நடத்தும் மக்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றும் ஐதீகம் உள்ளதால் வாழைப்பழத்தை தண்ணீரில் விட்டு ஆயிரக்கணக்கான பித்தளை மணிகளை கோவில் வளாகத்தில் உள்ள செடிகொடிகளில் கட்டுவார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X