Advertisement

கார்கள் மோதல்; ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி

சம்பவம் ஆகஸ்ட் 04,2019 | 12:53 IST

Share

தருமபுரி, பென்னாகரத்தை சேர்ந்த திருமூர்த்தி ஆடிபெருக்கு விழாவையொட்டி, மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் அதியமான்கோட்டை அருகே உள்ள மாமியார் வீட்டுக்கு காரில் சென்றுவிட்டு இரவில் திரும்பி கொண்டிருந்தார். சோம்பட்டி அருகே மல்லாபுரத்தில் வந்தபோது, எதிரே வந்த காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், திருமூர்த்தி அவரது மனைவி லதா, 13 வயது மகன் நிதி அபிநவ், 10 வயது மகள் அபிநயகீர்த்தி ஆகியோர் உயிரிழந்தனர். மற்றொரு 6 வயது மகள் வேத ரித்திகா மற்றும் எதிரே காரில் வந்த 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். எதிரே வந்த காரை ஓட்டி வந்த முருகன் தப்பியோடிவிட்டார். அவரை தேடி வரும் போலீசார், விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X