Advertisement

நெல்லை ஆதினம் இப்படி செய்யலாமா?

பொது ஆகஸ்ட் 04,2019 | 00:00 IST

Share

நெல்லை, மேலரதவீதியில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தில் பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் திருமண மண்டபம் கட்டும் பணி நடைபெறுகிறது. இடிக்கப்படும் பழைய கட்டடத்தின் கழிவுகள் நெல்லை ஜங்ஷன் அருகே தாமிரபரணி ஆற்றில் உள்ள முருகன் கோயில் அருகே கொட்டப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றில் கட்டிடக்கழிவுகள் கொட்டுவதால், ஆறு ஆக்ரமிக்கப்படுவதோடு, நீரோட்டமும் தடைபடும் வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகமும், தன்னார்வலர்களும் தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தி வருவதோடு, கழிவுகளை ஆற்றில் கொட்டவேண்டாம் என வலியுறுத்தி வரும் நிலையில், திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டட கழிவுகள் ஆற்றில் கொட்டப்படுவது கவனிக்கத்தக்கது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X