Advertisement

ஆய்வு கட்டுரைக்கு லஞ்சம்: பேராசிரியர் கைது | Bribe for study essay : Professor arrested | Kanyakumar | Dinamalar

பொது ஆகஸ்ட் 05,2019 | 00:00 IST

Share

மதுரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியராக மார்த்தாண்டத்தை சேர்ந்த ரசல்ராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது ஆராய்ச்சி மாணவி கிளாடிஸ் புளோரா என்பவரிடம் ஆய்வு கட்டுரை சமர்ப்பண சான்றுக்காக 50 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். பணம் கொடுக்க விரும்பாத புளோரா,லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்கள் அளித்த ஆலோசனையின் பேரில், ரசல் ராஜ்க்கு பணம் தருவதாக ஒப்புக்கொண்டு, மார்த்தாண்டத்தில் வைத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பேராசிரியர் ரசலை லஞ்ச பணத்துடன் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X