Advertisement

‛கோமாளி' - ரஜினி கிண்டல் காட்சி நீக்கம்

சினிமா வீடியோ ஆகஸ்ட் 05,2019 | 17:55 IST

Share

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிக்கும் படம் ‛கோமாளி'. புதியவர் பிரதீப் ரங்கநாதன் இயக்க, ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இரு தினங்களுக்கு முன்னர் வெளியான டிரைலரில் ரஜினியின் அரசியல் வருகையை கிண்டல் செய்யும் காட்சி இடம் பெற்றிருந்தது. ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். நடிகர் கமல்ஹாசனும் கண்டனத்தை தெரிவித்தார். ஐசரி கணேசை தொலைபேசியில் அழைத்து பேசிய கமல், "இதை என்னால் காமெடியாக பார்க்க முடியவில்லை. எனது வருத்தத்தை பதிவு செய்கிறேன்" என்று கூறிருக்கிறார். இந்த தகவலை கமல்ஹாசனின் மக்கள் தொடர்பாளர் முரளி அப்பாஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ‛‛ரஜினி எனது நெருங்கிய நண்பர். நான் அவரது தீவிர ரசிகர். அவரை கிண்டல் செய்யும் நோக்கம் எதுவும் இல்லை. இது தொடர்பாக கமல் என்னிடம் பேசினார். அந்தக்காட்சியை நீக்குவதாக கூறியிருந்தேன். ரசிகர்களும் தொடர்ந்து நீக்க வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து அந்த காட்சிகளை நீக்குகிறோம்'' என ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X