அரசியல் » அமைச்சர் உதவியாளர் மீது தாக்குதல் ஆகஸ்ட் 05,2019 18:00 IST
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள பெரியப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஓட்டு போட்டு விட்டு வெளியே வந்த பொதுமக்களுக்கு ஆட்டோவில் அமர்ந்துகொண்டு சிலர் பணம் கொடுத்து கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த திமுகவினர் பணம் கொடுத்த இருவரையும் பிடித்து ஒரு வீட்டில் பூட்டி அடைத்து வைத்தனர்.. இதனை அறிந்த அமைச்சர் நீலோபர் கபில் தலைமையில் ஒரு குழுவினர் வீட்டின் பூட்டை உடைத்து அவர்களை மீட்டனர். திமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அமைச்சரின் உதவியாளர் அருணை தாக்கினர். பணம் பணம் பட்டுவாடா செய்த சென்னை ஆர் கே நகரைச் சேர்ந்த மனோகர்,பாஸ்கர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து ஆட்டோவில் அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் இருதரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
வாசகர் கருத்து