சினிமா வீடியோ » கமல் நடிப்பில் 5 படங்கள் ஆகஸ்ட் 06,2019 18:35 IST
அரசியலுக்கு போன கமல்ஹாசன், தொடர்ந்து மூன்றாவது சீசனாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்தவாரம் இந்த நிகழ்ச்சியில் தனது 5 படங்களை பற்றி தெரிவித்தார். சனிக்கிழமையன்று ‛இந்தியன் 2', ‛தலைவன் இருக்கிறான்' படங்களுக்காக தனது மீசையை எடுத்ததாக கூறிய கமல், ஞாயிறு அன்று பேசும்போது, ‛தேவர்மகன் 2'வில் சிவாஜி வேடத்தில் நடிக்க விரும்புவதாகக் கூறினார். மேலும், எம்.ஜி.ஆரின் ‛நாளை நமதே' படத்தில் நடிக்க வேண்டியது, அது முடியாமல் போய்விட்டது. அதன் தலைப்பை வாங்கி வைத்திருப்பதாகவும், ‛மருதநாயகம்' படம் பற்றி தான் வேறு திட்டம் வைத்திருப்பதாகக் கூறினார்.
வாசகர் கருத்து