சம்பவம் » அடுத்தடுத்து 7 கார்கள் மோதி விபத்து: 6 பேர் பலி ஆகஸ்ட் 07,2019 00:00 IST
துறையூரை சேர்ந்த சிதம்பரம் என்பவர் புதுக்கோட்டையிலிருந்து திருச்சி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். நார்த்தாமலை அருகே சென்று கொண்டிருந்த போது டயர் வெடித்ததில் தாறுமாறாக ஓடிய கார் எதிரே வந்த காரின் மீது பயங்கரமாக மோதியது. கார்கள் நடுரோட்டில் மோதிக்கொண்டதால் முன்னும் பின்னும் வேகமாக வந்த மேலும் 5 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளாகின. இந்த விபத்தில் சிதம்பரம், ரங்கராஜன், நாகரத்தினர் மற்றும் ஒரு பெண் என 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 15 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாசகர் கருத்து