ஆன்மிகம் வீடியோ » திருச்சியில் அருள்பாலிக்கும் அத்திவரதர் ஆகஸ்ட் 08,2019 00:00 IST
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு பின் நீருக்குள் இருந்து வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில் காஞ்சியில் சென்று பார்க்க முடியாதவர்களுக்கு திருச்சி கைலாசநாதர் கோயிலில் அத்திவரதர் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆடிமாத ருத்தாபிஷேகத்தோடு, அத்திவரதர் தரிசனமும் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்களாக சயன கோலத்தில் அருள்பாலித்த அத்திவரதர், 10ம் தேதி வரை நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரம் சென்று பார்க்க முடியாதவர்கள் திருச்சியில் தரிசனம் செய்து கொள்ளலாம் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து