சம்பவம் » கார் மோதி ஒருவர் பலி; உறவினர்கள் முற்றுகை ஆகஸ்ட் 09,2019 00:00 IST
கன்னியாகுமரி, கோழிவிளையை சேர்ந்த கூலி தொழிலாளி ஜெய்லானி, களியக்காவிளையில் இருந்த மார்த்தாண்டம் சாலையில் இருக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பின்னால் வந்த, அமமுக பிரமுகர் உதயகுமாரின் கார், இருசக்கர வாகனத்தில் மோதியதாக தெரிகிறது. இதில், தூக்கி வீசப்பட்ட ஜெய்லானி, எதிரே வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜெய்லானிக்கும், உதயகுமாருக்கும் இடையே முன்விரோதம் இருப்பதால், இந்த விபத்தில் மர்மம் இருப்பதாக கூறி ஜெய்லானி உறவினர்கள் களியக்காவிளை காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி, அவர்களை அனுப்பி வைத்த போலீசார், தப்பியோடிய அமமுக பிரமுகர் உதயகுமாரை தேடி வருகின்றனர் .
வாசகர் கருத்து