Advertisement

நீலகிரியில் மழை: 6 பேர் உயிரிழப்பு

சம்பவம் ஆகஸ்ட் 09,2019 | 16:00 IST

Share

நீலகிரி, அவலாஞ்சியில் தமிழகத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு 91.1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. கனமழை தொடர்வதால் வெள்ளப்பெருக்கு மற்றும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஊட்டி அருகேயுள்ள குருட்டுக்குழியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 2 பெண்களும், பைக்காராவில் வீடி இடிந்து 8 வயது குழந்தையும் உயிரிழந்துள்ளனர். வடமாநில வாலிபர், முதியவர், ஒரு பெண் உட்பட இதுவரை மழைக்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர். 7 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுளளனர். மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அவலாஞ்சிக்கு விரைந்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X