Advertisement

மழை வெள்ளத்தில் மிதக்கும் மாநிலங்கள் |Kerala Floods |Maharashtra |Rain |Monsoon

பொது ஆகஸ்ட் 10,2019 | 19:38 IST

Share

இடைவிடாது தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்ட மக்கள் சிரமம் அடைந்துள்ளனர். இந்த மாநிலங்களில் மழை, வெள்ளத்திற்கு 90 பேர் பலியாகியுள்ளனர். மழையின் காரணமாக கேரளாவின் வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கர்நாடகா மாநிலத்தில் 1.3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். வௌ்ளம் காரணமாக 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். கோதாவரி ஆற்றில் காப்பர் அணை அருகே சிக்கிக்கொண்ட 31 மீனவர்களை கப்பல் படை ஹெலிகாப்டர் மூலமாக பத்திரமாக மீட்டனர். இந்நிலையில், தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டுவதால் குந்தா, சாண்டிநல்லா, காட்டேரி அணைகள் நிரம்பி வழிகின்றன. அப்பர்பவானி, அவலாஞ்சி, பைக்காரா உட்பட பெரும்பாலான அணைகளில் முழு கொள்ளளவை எட்டி வருகிறது. இதனிடையே நீலகிரி, கோவை, தேனி, உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X