Advertisement

மழையில் பலியானோர் குடும்பங்களுக்கு இழப்பீடு

பொது ஆகஸ்ட் 11,2019 | 19:31 IST

Share

நீலகிரியில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையில் சிக்கி 6பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, கால்நடைதுறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் நடுவட்டத்தில் மழையால் வீடு இடிந்து உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு 20 லட்சத்திற்கான காசோலை வழங்கினார். எஞ்சிய பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என கூறிய அமைச்சர், முகாமில் தங்கியுள்ளவர்கள் நிரந்தர வீடுகள் கட்டித்தர கோரிக்கை விடுத்திருப்பதால், அவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என்றும், சேதமடைந்த விவசாய பயிர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்றார். byte இதனிடையே, நீலகிரியில் மழையால் பாதிக்கப்பட்ட நடுவட்டம் பேரூராட்சி, இந்திரா நகருக்கு நேரில் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். கூடலூர் சென்று மழையால் பாதித்த இடங்களையும் ஸ்டாலின் பார்வையிட்டார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X