Advertisement

5 நாட்களாக வாகனங்கள் நிறுத்தம்; 3 மாநில மக்கள் தவிப்பு

பொது ஆகஸ்ட் 12,2019 | 14:28 IST

Share

நீலகிரி,கேரளாவில் ஒரு வாரமாக கனமழை பெய்ததால், பந்தலுாரிலிருந்து, நாடுகாணி வழியாக நிலம்பூர், திருச்சூர், பாலக்காடு செல்லும் சாலைகளில் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. சாலைகளில் பிளவும் ஏற்பட்டுள்ளதால், 5 நாட்களாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கல்பெட்டா, பத்தேரியில் இருந்து திருச்சூர், பாலக்காடு செல்லும் சாலை, மைசூர் - திருச்சூர், ஊட்டி - கோழிக்கோடு, கூடலூர் - நிலம்பூர் சாலைகளில் பேருந்துகள் உட்பட எந்த வாகனங்களும் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநில பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சரக்கு லாரிகளும் இயக்க முடியாத நிலையில், கேரளாவுக்கு காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 5 நாட்களாக போக்குவரத்து தடைபட்டுள்ளதால், கேரளாவின் கோரிக்கையை ஏற்று, நீலகிரி மாவட்ட நிர்வாகமும் சாலைகளை சீரமைக்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X