Advertisement

கொள்ளைக்காரர்களை போராடி விரட்டிய தம்பதி | Brave old couples

சம்பவம் ஆகஸ்ட் 12,2019 | 17:00 IST

Share

திருநெல்வேலி மாவட்டம் கடையம் பகுதியில் கல்யாணிபுரம், சாந்தோம் பள்ளி அருகே உள்ளது சண்முகவேல் என்பவரின் தோட்ட வீடு. இரவில்வீட்டின் பக்கவாட்டில் சண்முகவேல் அமர்ந்த நிலையில், மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்தார். சத்தமின்றி பின்பக்கமாக வந்த ஒரு கொள்ளையன், பின்னாலிருந்து சண்முகவேலின் கழுத்தை துண்டால் இறுக்க முயன்றான். அவர் சத்தம் போட்டு கத்தவே, வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த சண்முகவேலின் மனைவி செந்தாமரை, கையில் கிடைத்த செருப்பு மற்றும் நாற்காலிகளை வீசியடித்து கொள்ளையனிடம் இருந்து கணவனை காப்பாற்ற முயன்றார். பக்கவாட்டில் இருந்து வந்த மற்றொரு கொள்ளையன், அரிவாளால் செந்தாமரையின் கையில் வெட்டி விட்டு, கழுத்தில் கிடந்த ஐந்து பவுன் செயினை அறுத்தான். பின்னர் இருவரும் தப்பிச் சென்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. வீடியோ காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு, கடையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X