Advertisement

பவானிசாகர் அணை திறப்பு

பொது ஆகஸ்ட் 16,2019 | 13:00 IST

Share

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் விவசாயிகள் நீரை திறந்து வைத்து மலர் தூவி வரவேற்றனர். தற்போது 500 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், படிப்படியாக உயர்த்தப்பட்டு 2,300 கனஅடி வரை நீர் திறக்கப்படவுள்ளது. டிசம்பர் 11 வரை நான்கு மாதங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுமென்றும், இதனால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் ஒரு லட்சத்து 3,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 105 அடி உயரமுள்ள பவானிசாகர் அணையில் தற்போது 93.80 அடி தண்ணீர் உள்ளது. நீர் இருப்பு 24.14 டி.எம்.சி.,யாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,193 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X