Advertisement

உலக சாதனைக்காக பரதநாட்டிய நிகழ்ச்சி

பொது ஆகஸ்ட் 16,2019 | 16:00 IST

Share

வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் ஜனசிஷ்சா கலாலயா சார்பில் கலையின் பேரலை என்ற கலைவிழா நடத்தப்பட்டது. டிப்பா உலக சாதனைக்காக நடைபெற்ற இந்தப் பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்க, தற்போதைய மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நிகழ்வைத் துவங்கி வைத்தார். இதில் 6800 மாணவ,மாணவிகள் ஒரே இடத்தில் கூடி பாரதியாரின் 5 தேசபக்தி பாடல்களுக்கு தொடர்ந்து நாட்டியம் சாதனை செய்தனர். நிகழ்வில் வேலூர் தொழில்நுட்ப பல்கலைகழக வேந்தர் விசுவநாதன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். டிப்பா உலகசாதனை நிறுவனத்தினர் மாணவ மாணவியருக்கு சாதனைக்கான சான்றிதழ்களை வழங்கினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X