Advertisement

ஆரோவில்லில் 'போன் பயர்'

பொது ஆகஸ்ட் 16,2019 | 16:00 IST

Share

'உலகில், மனித ஒற்றுமைக்கு அடையாள சின்னமாக, ஒரு சர்வதேச நகரை உருவாக்க வேண்டும்' என்ற கருத்து, முதன் முதலாக தத்துவ ஞானி அரவிந்தர் எழுத்துக்களில் இருந்து தோன்றியது. அரவிந்தர் ஆசிரம அன்னையின் பெரும் முயற்சியால், 1967ம் ஆண்டு, பிப்ரவரி 28ம் தேதி, புதுச்சேரியில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் ஆரோவில் சர்வதேச நகரம் ஆரம்பிக்கப்பட்டது. இந்நகரம் உருவாவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்த அரவிந்தரின் பிறந்தநாள், ஆரோவில்லில் கொண்டாடப்பட்டது. இங்கு வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், மாத்திரி மந்திர் அருகில் அமைந்துள்ள ஆம்பி தியேட்டரில் அதிகாலையில் கூடி, 'போன் பயர்' எனும் தீப்பிழம்பை ஏற்றி, தியானத்தில் ஈடுபட்டனர். கூட்டு தியானத்தின்போது, ஆரோவில் சாசனம் அன்னையின் குரலால் ஒலிபரப்பப்பட்டது. 'போன் பயர்' தீப்பிழம்பின் பின்னணியில், மாத்திரி மந்திர் தங்க நிறத்தில் ஜொலித்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X