Advertisement

விண்ணேற்பு அன்னை திருத்தேர் பவனி

ஆன்மிகம் வீடியோ ஆகஸ்ட் 16,2019 | 16:00 IST

Share

புதுச்சேரி நெல்லித்தோப்பில் நூற்றாண்டு பழமையான விண்ணேற்பு அன்னை ஆலயம் உள்ளது. இவ்வாலய 165-து ஆண்டுப்பெருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினந்தோறும் திருப்பலி மற்றும் சிறிய தேர்பவனி நடைபெற்று வந்தது. பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி வெகு சிறப்பாக நடைபெற்றது. மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அன்னையின் சொரூபம் முக்கிய வீதிகள் வழியாக தேர்பவனி நடைபெற்றது. ஆடம்பர தேர்பவனி நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி, முதல்வரின் டெல்லி பிரதிநிதி ஜான்குமார் உள்ளிட்ட ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டு அன்னையை பிரார்த்தித்தனர். முன்னதாக புதுச்சேரி-கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X