Advertisement

நீருக்குள் வைக்க அத்திவரதருக்கு செய்யப்படும் சம்பிரதாயங்கள்

ஆன்மிகம் வீடியோ ஆகஸ்ட் 16,2019 | 15:00 IST

Share

அத்திவரதர் வைபவத்தின் 47ம் நாளான வௌ்ளியன்று, ரோஜா மற்றும் மஞ்சள் வண்ண பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார், அத்திவரதர். கடைசி நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 5 கிலோ மீட்டர் தூரம் வரை காத்து நின்று பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர். கடந்த 46 நாட்களில் 1கோடியே 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடைசிநாளன்று மாலை 5 மணி வரை 3.5 லட்சம் பேர் தரிசனம் செய்தனர். இன்னும் 2.50 லட்சம் பேர் வரிசையில் நிற்கின்றனர். இரவு 9 மணிக்கு கிழக்கு ராஜகோபுரம் நடை சாத்தப்படும். அப்போது, கோயிலின் உட்பிரகாரத்தில் நிற்கும் 1 லட்சம் பேருக்கு மட்டும் நள்ளிரவு வரை தரிசிக்க அனுமதி வழங்கப்படும் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்தார். அதன்பிறகு வசந்த மண்டபம் மூடப்படும். பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X