Advertisement

போலீஸ் நடத்திய கால்பந்து போட்டி

விளையாட்டு ஆகஸ்ட் 17,2019 | 17:24 IST

Share

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புளியந்தோப்பு காவல் சரகம் சார்பில் போலீஸ் - பொதுமக்கள் பங்கேற்ற கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. புளியந்தோப்பு, ஓட்டேரி, திரு.வி.க நகர், செம்பியம், வியாசர்பாடி, கொடுங்கையூர், எம்.கே.பி. நகர், பேசின்பிரிட்ஜ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியிலும் ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் உள்ளூர் கால்பந்து வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இறுதிப்போட்டியில் எம்.கே.பி நகர், கொடுங்கையூர் அணிகள் மோதின. இணை கமிஷ்னா் விஜயகுமாரி, துணை கமிஷ்னா் சாய்சரண் தேஜஸ்வி துவங்கிவைத்தனர். ஆட்ட நேர இறுதிவரை இரு அணிகளும் கோல் போடவில்லை. பெனால்டி ஷூட்டில் 4க்கு 3 என்ற கோல் கணக்கில் கொடுங்கையூர் பாய்ஸ் கிளப் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு இணை கமிஷனர் விஜயகுமாரி பரிசுகளை வழங்கி, பாராட்டிப் பேசினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X